×

சாக்கடைக்குள் முதியவர் சடலம் மீட்பு

சேலம், ஜன.18: சேலம் வெங்கடப்பசெட்டி ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் முதியவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து சென்று, சாக்கடைக்குள் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சர்தார்பாஷா (60) என்பது தெரியவந்தது. கேளராவுக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் எப்படி சேலத்திற்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாக்கடைக்குள் முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Venkatapasetty Road ,Sewwaipet ,Sardar Pasha ,Ulundurpet ,
× RELATED சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து...